” நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்துக்காட்டுவேன்.”

இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார்.

பிரதமராக பதவியேற்ற பின்னர் ஆன்மீக வழிபாடுகளில் ஈடுபட்டார்.அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

” கோட்டகோகம போராட்டம் தொடரலாம்.
போராட்டக்காரர்கள்மீது பொலிஸார் கைவைக்கமாட்டார்கள்.” – எனவும் அவர் குறிப்பிட்டார்.