71 தடவைகள் தான் பிரதமர் பதவியை நிராகரித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், 52 நாள் சதி அரசாங்கம் உள்ளிட்ட ஜனநாயக நெறிமுறைகளுக்கு முரணான அனைத்து சம்பவங்களிலும் நான் உறுதியுடன் எதிர்த்துப் ​போராடியுள்ளேன்.
அதன் காரணமாக பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு எனக்கு 71 தடவைகள் அழைப்பு விடுக்கப்பட்டும் அதனை நான் நிராகரித்துள்ளேன்.
பதவிக்கு ஆசைப்பட்டு அரசியல் செய்வதைப் பார்க்கிலும் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்காக அரசியல் செய்வதையே நான் விரும்புகின்றேன் என்றும் சஜித் பிரேமதாச தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.