தளம்
சிறப்புச் செய்திகள்

துறைமுகத்தில தேங்கியுள்ள 500 கொள்கலன்கள் .!

இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கொண்ட சுமார் 500 கொள்கலன்களை விடுவிக்க முடியாதுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

திறந்த கணக்குகள் மூலம் இறக்குமதி செய்வதை தடை செய்யும் அரசாங்கத்தின் நடவடிக்கை காரணமாக அவற்றை விடுவிக்க முடியாதுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இது தொடர்பில் அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரட்ன கூறுகையில், திறந்த கணக்குகள் மூலம் இறக்குமதி செய்வதை தடை செய்யும் அரசாங்கத்தின் நடவடிக்கை காரணமாக இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டசுமார் 500 கொள்கலன்கள் துறைமுகத்தில தேங்கியுள்ளன.

இவ்வாறு தேங்கியுள்ள கொள்கலன்களில் வெங்காயம், உருளைக்கிழங்கு, பூண்டு, பருப்பு, உலர் உணவுப் பொருட்கள் போன்ற இலகுவில் பழுதடையும் அத்தியாவசிய பொருட்கள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

டொலர் நெருக்கடிக்கு அரசால் தீர்வைக் காண முடியாமல் போயுள்ளது..!

Fourudeen Ibransa
2 years ago

டளஸ் அழகப்பெரும தலைமையில் திரண்ட அணி.!

Fourudeen Ibransa
2 years ago

இலங்கையில் நாளை முதல் அமுலுக்குவரும் புதிய கட்டாய நடைமுறை..!

Fourudeen Ibransa
3 years ago