தளம்
சிறப்புச் செய்திகள்

கொழும்பில் இன்று முதல் தினமும் Park and ride…..!

கொழும்பில் இன்று முதல் தினமும் Park and ride பேருந்து சேவையை நடத்துவதற்கு போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை மாக்கும்புர, கடவத்தை மற்றும் கட்டுபெத்த ஆகிய இடங்களில் குறித்த பேருந்துகள் பயணிக்கவுள்ளன. அத்துடன் மாலை 4 மணி முதல் 6 மணி வரை கொழும்பிலிருந்து மாக்கும்புரஇ கடவத்தை மற்றும் கட்டுபெத்த வரை பேருந்து பயணிக்கும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று அறிமுகமாகிறது Park and ride சேவை!
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
Park and ride
Park and ride என்பது தங்கள் சொந்த வாகனத்தில் பயணத்தை மேற்கொள்ளும் கொழும்பு புறநகர் வாழ் மக்கள் அதனை மாக்கும்புர, கடவத்தை மற்றும் கட்டுபெத்த பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்திவிட்டு, சொகுசு பேருந்துகளில் கொழும்பு நகரத்திற்கு பயணிக்க முடியும்.
அதற்காக சொகுசு பேருந்து சேவைகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் 8 மணி வரை 5 நிமிடங்களுக்கு ஒரு முறை குறித்த 3 இடங்களில் இருந்து பேருந்துகள் பயணிக்கின்றன.
கொழும்பில் இன்று அறிமுகமாகிறது Pயசம யனெ சுனைந சேவை!
பின்னர் மாலை 6 மணி முதல் 8 மணி வரையான காலப்பகுதியிலும் இவ்வாறு 5 நிமிடங்களுக்கு ஒரு முறை பேருந்துகள் சேவையில் ஈடுபடும். இடைப்பட்ட காலப்பகுதியில் மணித்தியாலத்திற்கு ஒரு முறை ஒரு பேருந்து பயணிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை கடந்த வருடம் ஜனவரி மாதம் 15ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முதல் முறையாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது அது பயன்பாட்டுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதிக்கு அரசியல் அனுபவம் குறைவு.!

Fourudeen Ibransa
2 years ago

அரசும் எதிர்க்கட்சியும் ஒன்றிணைய வேண்டும்” 

Fourudeen Ibransa
2 years ago

கொழும்பின் கள நிலைமை மோசம் ! ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் பதற்றம் .!

Fourudeen Ibransa
2 years ago