தளம்
சிறப்புச் செய்திகள்

 வெளிநாடு செல்வதற்கு அனுமதி கோரும் வைத்தியர்களுக்கு அனுமதி வழங்க பின் வாங்க மாட்டோம்.!

உரிய நடைமுறைகள் இன்றி வெளிநாடு சென்றவர்கள் மற்றும் வெளிநாடு சென்ற வைத்தியர்களை உடனடியாக நாடு கடத்துமாறு அந்த நாடுகளில் உள்ள இலங்கை தூதுவர்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

தற்போது 100க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்கள் உரிய நடைமுறைகள் இன்றி வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் மேலும் சிலர் வெளிநாடுகளுக்குச் செல்லவுள்ளதாகவும் வெளியாக்கியுள்ளது.

உத்தியோகபூர்வ அங்கீகாரம் பெறாமல் வைத்தியர்கள் வெளிநாடு சென்றால், நிறுவன சட்டத்தின் பிரகாரம் சேவையில் இருந்து விலகியவர்கள் என பதிவை நீக்க வேண்டியிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயிற்சிக்காக வெளிநாடு சென்ற சில வைத்தியர்களும் இலங்கைக்கு வர மறுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முறையான நடைமுறைகள் இல்லாமல் வெளிநாடு செல்லும் மருத்துவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் ஜே.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

எப்படியிருப்பினும் முறையான நடைமுறைக்கு அமைய வெளிநாடு செல்வதற்கு அனுமதி கோரும் வைத்தியர்களுக்கு அனுமதி வழங்க பின் வாங்க மாட்டோம் என பிரதிப் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.

Related posts

இலங்கையின் இளம் பாடகி படைத்த சாதனை!

Fourudeen Ibransa
3 years ago

எதிர்கால அரசியல் பயணத்துக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் தனி கூட்டணி

Fourudeen Ibransa
3 years ago

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உணவு கிடைக்காமல் போவதற்கான சாத்தியம் அதிகம்!

Fourudeen Ibransa
2 years ago