தளம்
சிறப்புச் செய்திகள்

ஒருவர் வைத்திருக்கக்கூடிய வெளிநாட்டு நாணயம் 10,000 டொலர்

இலங்கை மத்திய வங்கி, இலங்கையில் வசிக்கும் ஒருவர் வைத்திருக்கக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் அளவை 15,000 அமெரிக்க டொலர்களில் இருந்து 10,000 அமெரிக்க டொலர்களாக குறைக்க தீர்மானித்துள்ளது.

10,000 அமெரிக்க டொலர்களாக குறைக்க தீர்மானித்துள்ள நிலையில் தற்போது ஜுன் 16ஆம் திகதி முதல் 14 வேலை நாட்களை கொண்ட பொது மன்னிப்பு காலமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமன்னிப்புக் காலப்பகுதியின் இறுதியில் வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் நியதிகளுக்கமைய கட்டளையை மீறி வெளிநாட்டு நாணயத்தை உடைமையில் வைத்திருக்கின்ற ஆட்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

Related posts

 “தற்போதுதான் கப்பலில் ஏறியுள்ளேன். இன்னும் ஓரிரு நாட்களில் எனது வேலையை காட்டுவேன். 

Fourudeen Ibransa
2 years ago

ஜனாதிபதி ரணில் – மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடையில் திடீர் சந்திப்பு.!

Fourudeen Ibransa
2 years ago

இலங்கையை விட்டு வெளியேறிய 105,000 பேர்

Fourudeen Ibransa
2 years ago