தளம்
சிறப்புச் செய்திகள்

காஸ் கப்பல் இலங்கை வந்துள்ளது .!

3,700 மெட்ரிக் டொன் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு முதல் கப்பல் நாட்டின் கடல் எல்லையை வந்தடைந்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.

3,740 மெற்றிக் டொன் எரிவாயு அடங்கிய இரண்டாவது கப்பல் நாளை (11.) மாலை நாட்டுக்கு வரவுள்ளது.
முதலாவது கப்பல் இன்று (10.07) பிற்பகல் 03 மணிக்கு கெரவலப்பிட்டியை வந்தடைந்தடையுமெனவும் வந்தவுடன் உடனடியாக எரிவாயுவை இறக்கி விநியோகிக்கும் பணிகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளாதாக ஜனாதிபதி அலுவலம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3,200 மெட்ரிக் தொன் எரிவாயுவுடன் மூன்றாவது கப்பல் ஜூலை 15 ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளதுடன், இம்மாதத்திற்காக பெற்றுக்கொள்ள விண்ணப்பம் விடுக்கப்பட்டுள்ள எரிவாயுவின் அளவு 33,000 மெட்ரிக் தொன் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 12 முதல் எரிவாயு விநியோகம் சீராகவும் முறையாகவும் நடைபெறும் என்றும், இம்மாத இறுதிக்குள் வீட்டு எரிவாயு தேவை தொடர்பான பிரச்சினை முற்றிலும் தீர்க்கப்படும் என்றும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளதாகவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜுலை 22 ஆம் திகதி பெற்றோல் கப்பல் இலங்கையை வந்தடையும்

Fourudeen Ibransa
2 years ago

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் குழுவொன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்பட தீர்மானம்.!

Fourudeen Ibransa
2 years ago

எகிறியது பஸ் கட்டணம்- ஆகக்குறைந்த பஸ் கட்டணமே 40 ரூபாவா?

Fourudeen Ibransa
2 years ago