தளம்
சிறப்புச் செய்திகள்

லண்டனில் தீ விபத்தில் உயிரிழந்த இலங்கை குடும்பம்.!

லண்டனில் 2 பச்சிளம் குழந்தைகள் உட்பட நான்கு இலங்கைத் தமிழர்களின் உயிர்களை பலி கொண்ட தீவிபத்துக்கான காரணம் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 18-ஆம் திகதி (வியழைக்கிழமை) இரவு லண்டனில் உள்ள பெக்ஸ்லிஹீத்தில் வசித்து வந்த இலங்கைத் தமிழர்களின் வீட்டில் இந்த தீவிபத்து நடந்தது.

இந்த விபத்தில் யோகன் தங்கவடிவேல் என்பவற்றின் நான்கு வயதுடைய ஆன் குழ்நதை தவிஷான் மற்றும் 23 மாத பெண் குழந்தை சஸ்னா, மனைவி நிருபா யோகன் (29) மற்றும் அவரது மாமியார் நாக்ரசானி வசந்தராஜா (60) ஆகிய நான்கு பேரும் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்தனர்.

விபத்து ஏற்பட்டபோது யோகன் தங்கவடிவேல் பணியிடத்தில் இருந்துள்ளார். விபத்தின் பொது அவருக்கு நிருபா போன் செய்துள்ளார். ஆனால் அவர் வீட்டிற்கு வருவதற்குள் நால்வரும் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் மற்றோரு ஆண் சிறிய தீக்காயங்களுடன் உயிர்தப்பியதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், தீவிபத்துக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டது. அது தொடர்பிலான அறிக்கை இன்று லண்டன் குராய்டன் கரோனர்ஸ் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்து பண்டிகைக்கு ஏற்றிய எண்ணெய் விளக்கினால் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது என்பது விசாரணையில் தெரியவந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

பண்டிகை பாரம்பரியத்தைப் பின்பற்றி குடும்பத்தினர் தங்கள் வீட்டைச் சுற்றி எப்படி பல விளக்குகளை வைத்தனர் என்பதை குராய்டன் கரோனர்ஸ் நீதிமன்றம் விசாரித்தது.

ஆனால் மாடியில் உள்ள படுக்கையறையில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தபோது, ​​படிக்கட்டுக்கு அடியில் இருந்த அலமாரியில் இருந்த மின்விளக்கு, எரிவாயு மற்றும் மின்சாரம் தீப்பிடித்து எரிந்ததால் மாட்டிக்கொண்டனர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

குடும்பத்தை இழந்த சோகத்தில் இருக்கும் யோகன் தங்கவடிவேல், “எங்கிருந்து தொடங்குவது என்று கூட எனக்குத் தெரியவில்லை. இவ்வளவு பெரிய இழப்பை எவ்வாறு விளக்குவது? அவர்கள் அனைவரும் போய்விட்டார்கள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை, நான் எப்படி இதிலிருந்து மீண்டு வருவேன் என்று எனக்குத் தெரியவில்லை. அனைவரையும் இழந்து வலியுடன் வாழ்ந்துவருகிறேன்” என்று கூறினார். 

Related posts

மஹிந்த கட்சியினரின் திடீர் தீர்மானம்.!

Fourudeen Ibransa
2 years ago

யுத்த காலத்தில் நடந்த ஏராளமான விடயங்களைப் பகிர்ந்துகொள்ள முடியாது.!

Fourudeen Ibransa
2 years ago

அமைச்சருடன் மோதல்.!

Fourudeen Ibransa
3 years ago