தளம்
இந்தியா

உலகின் பணக்காரர் பட்டியலில் முதல் 13 பெண் கோடீஸ்வரர்களில் ஒருவர்!.!

போர்ப்ஸ் இந்தியா இதழ் நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது. இந்த கோடீஸ்வரர் பட்டியலில் நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஜிண்டால் குழுமத்தின் தலைவரான சாவித்ரி ஜிண்டால் பட்டியலில் 91-வது இடத்தில் உள்ளார். இவரது கணவர் ஓம் பிரகாஷ் ஜிண்டால் கடந்த 2005-ம் ஆண்டில் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார். அதன்பிறகு அவரின் மனைவி சாவித்ரி ஜிண்டால் தொழிலை வழிநடத்தி சென்றார்.

அதன்பிறகு அரசியலிலும் இறங்கினார். இந்தியாவில் மிகப்பெரிய பணக்கார பெண்களில் ஒருவரான இவரது சொத்து மதிப்பு கடந்த 2 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு இவரது சொத்து மதிப்பு 4.8 மில்லியன் டாலராக இருந்தது. நடப்பாண்டில் சொத்து மதிப்பு 17.7 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

அதாவது கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் அவரின் சொத்து மதிப்பு 12 மில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. அதேநேரம் கடந்த 2019 மற்றும் 2020-ல் இவரின் சொத்து மதிப்பு 50 சதவீதம் குறைந்துள்ளது. 2018-ம் ஆண்டில் சொத்து மதிப்பு 8.8 மில்லியன் டாலராக இருந்தது. 2019-ல் 5.9 மில்லியன் டாலராகவும், 2020-ல் 4.8 மில்லியன் டாலராகவும் சரிவினை கண்டிருந்தது.

தனது கணவரின் வெற்றி மந்திரத்தின் மூலம் தொழிலை வெற்றிகரமாக நடத்தி வரும் சாவித்ரி ஜிண்டால் உலகின் பணக்காரர் பட்டியலில் முதல் 13 பெண் கோடீஸ்வரர்களில் ஒருவராக சாதனை படைத்துள்ளார்

Related posts

காவல்நிலையத்தில் கடைசி கையெழுத்து: மகிழ்ச்சி பொங்க வந்த நளினி..!

Fourudeen Ibransa
1 year ago

“பா ஜ க மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது” – வாக்காளர்களுக்கு பிரியங்கா எச்சரிக்கை!

Fourudeen Ibransa
1 year ago

உலக நாடுகளின் பார்வையை தன்பக்கம் திருப்பிய தமிழர்…!

Fourudeen Ibransa
1 year ago