தளம்
சிறப்புச் செய்திகள்

ஒக்டோபர் இறுதிக்குள் நிலக்கரி இறக்குமதி செய்யப்படாவிடின் 8 மணி நேர மின் வெட்டு!

நுரைச்சோலை லக்விஜய அனல்மின் நிலையத்துக்குத் தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்வது தொடர்பில் பொறுப்பான தரப்பினர் இன்னும் சரியான இணக்கப்பாட்டுக்கு வரவில்லை என இலங்கை நிலக்கரி நிறுவனம் கூறியுள்ளது.

இந்நிலையில், நிலக்கரியை இறக்குமதி செய்ய ஒப்புக்கொண்ட அதே நிறுவனத்திலிருந்தே நிலக்கரி இறக்குமதி செய்யப்படுமா அல்லது மீண்டும் டெண்டர் கோரப்படுமா என்பதை உறுதியாகக் கூற முடியாது என்று அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், இது தொடர்பில் அரசாங்கம் இன்று இறுதித் தீர்மானமொன்றை எட்டும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, ஒக்டோபர் இறுதிக்குள் தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்யாவிட்டால் கிட்டத்தட்ட 8 மணிநேரம் மின்வெட்டு ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஒக்டோபர் 20ஆம் திகதி வரை மட்டுமே நிலக்கரி போதுமானதாக இருக்கும் என நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

இன்று செய்யும் முட்டாள் தனமான செயற்பாடுகள் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தில் இல்லை..!

Fourudeen Ibransa
2 years ago

இலங்கை மத்திய வங்கியின் 16ஆவது ஆளுநர் கப்ரால்

Fourudeen Ibransa
3 years ago

ஆறடி நிலமல்ல, ஒரு சவப்பெட்டிகூட சொந்தமில்லாத நிலை.!

Fourudeen Ibransa
3 years ago