தளம்
மலையகம்

ஐக்கிய மக்கள் கூட்டணி ’22’ இற்கு நிபந்தனையுடன் ஆதரவு!

அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு நிபந்தனைகளுடன் ஆதரவு வழங்க பிரதான எதிர்க்கட்சி ஐக்கிய மக்கள் கூட்டணி தீர்மானித்துள்ளது.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைமைக்குழு நேற்று கூடியது. இதன்போதே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி கூட்டணியில் பங்காளியாக அங்கம் வகிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி மனோ கணேசன் இந்த தகவலை இன்று வெளியிட்டுள்ளார்.

” இரட்டை குடியுரிமை கொண்டோர் நாடாளுமன்றத்தில் உறுப்புரிமை வகிக்க முடியாது. சமர்பிக்கப்பட்டுள்ள வரைபில் உள்ளதை மாற்றி, அமெரிக்க பிரஜை பஸில் ராஜபக்சவின் எண்ணப்படி செயற்பட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு நாம் ஒருபோதும் இடம் தர மாட்டோம். பஸில் ராஜபக்ச அமெரிக்க காங்கிரசில் இடம் தேடி கொள்ளட்டும்.

அதேவேளை நாடாளுமன்றத்தை, அடுத்த வருட முதல் காலாண்டில் கலைக்க இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதிகாரம் தரும், “இரண்டரை வருடம்”, என்ற விதி மாற்றப்படக்கூடாது. இந்நாட்டு மக்கள் இன்று, இந்த நாடாளுமன்றத்தை மாற்றி, புதிய நாடாளுமன்றத்தை அமைக்க விரும்புகிறார்கள். ஆகவே, இரண்டரை வருடத்தில் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் தொடர்ந்து விடப்படுவதை நாம் தந்திரோபாய நோக்கில் ஆதரிக்கிறோம்.

அதேவேளை, நாடாளுமன்றத்தில் குறைந்தபட்சம் 113 உறுப்பினர்கள் கூடி நாடாளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தலுக்கு செல்ல வேண்டும் என தீர்மானித்தால், அதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மறுக்க முடியாது. அதை அவர் ஏற்று நாடாளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தலுக்கு செல்ல தீர்மானிக்க வேண்டும் என நாம் நம்புகிறோம். ஆகவே அடுத்த வருடம் தேர்தல் மேகம் சூழும். புதிய மக்களாணையை பெற கட்சிகள் தயாராக வேண்டும். தேர்தலை சந்திக்க தமிழ் முற்போக்கு கூட்டணி தயார் நிலையில் இருக்கிறது. அந்நிலையை இன்னமும் மெருகூட்டும் நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.” – எனவும் மனோ குறிப்பிட்டார்.

Related posts

திலகர் அணியின் அடுத்த ஆட்டமும் ஆரம்பம்!

Fourudeen Ibransa
2 years ago

மாற்று தொழிற்சங்க அங்கத்தவர்கள் தத்தமது காரியாலயங்களில் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளவும் – ஜீவன்

Fourudeen Ibransa
3 years ago

பெருந்தோட்ட சமூகம், இலங்கையில் வாழும் மலையக தமிழரில் ஒரு அங்கம்..!

Fourudeen Ibransa
2 years ago