தளம்
தளம் TV

வாடகை தாய் குழந்தை விவகாரம்: வெளியானது விசாரணை குழு அறிக்கை…!

‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா-டைரக்டர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9-ந் தேதி நடந்தது. திருமணமாகி 4 மாதம் சென்ற நிலையில், கடந்த 9-ந் தேதி நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி டுவிட்டரில், தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்திருப்பதாக கூறி, குழந்தைகளின் பாதங்களை கைகளால் வருடி முத்தமிடும் படங்களையும் வெளியிட்டிருந்தனர். ‘அதெப்படி… திருமணமான 4 மாதங்களில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்?’ என்று அனைவருமே குழப்பம் அடைந்து போனார்கள். வாடகை தாய் மூலம் குழந்தை நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டது தெரியவந்தது.

இந்த விவகாரத்தில் வாடகை தாய் ஒழுங்குமுறை சட்ட விதிகள் மீறப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்தன. இதனைத்தொடர்ந்து மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் மூலம் கடந்த 13-ந் தேதி உயர்மட்ட விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. விசாரணையில் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பம் மற்றும் வாடகை தாய் மூலமாக நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி குழந்தை பெற்றுக்கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட அந்த தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்த டாக்டர்களிடமும், வாடகை தாய்க்கு பேறுகால சிகிச்சை அளித்த டாக்டர்களிடமும் நேரடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி குழந்தை பெற்றுக்கொண்ட விவகாரத்தில் வாடகை தாய் முறைக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று உயர்மட்ட குழு விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் இருவரும் விதிகளை மீறவில்லை என்பது தெளிவாகிறது. இதன் காரணமாக கடந்த 9-ந் தேதி முதல் நிலவிவந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை வெளியான உயர்மட்ட குழுவின் அறிக்கை விவரம் வருமாறு:-

கருக்கள் வளர்ந்த நிலையில் இரட்டை குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளது. அக்குழந்தைகள் கடந்த 9-ந் தேதி நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியிடம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனியார் ஆஸ்பத்திரி மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை இந்த விசாரணையில் தனியார் ஆஸ்பத்திரியில் சில குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது.

ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டு முறைகளின்படி, ஆஸ்பத்திரியில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதிக்கு அளித்த சிகிச்சை குறித்த விவரங்கள் மற்றும் வாடகை தாயின் உடல் நிலை குறித்த ஆவணங்கள் முறையாக வைத்திருக்க வேண்டும். ஆனால் இதுகுறித்த ஆவணங்கள் சரியான வகையில் ஆஸ்பத்திரியில் பராமரிக்கப்படவில்லை.

எனவே, மேற்கூறிய வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றாத தனியார் ஆஸ்பத்திரியின் செயற்கை கருத்தரித்தல் மையத்தை ஏன் தற்காலிகமாக மூடக்கூடாது? என்று ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டுள்ளது என்று விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

அரசியல் அரங்கம்

thalam
3 years ago

சுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தின் நோக்கம்

thalam
3 years ago

Independent Media Watch

thalam
3 years ago