தளம்
பிரதான செய்திகள்

லுணுகலை பிரதேச சபையின் பாதீடு தோற்கடிப்பு…!

லுணுகலை பிரதேச சபையின் , 2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று தோற்கடிக்கப்பட்டது.

பாதீட்டுக்கு ஆதரவாக 6 வாக்குகளும் எதிராக 14 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இரு உறுப்பினர்கள், சிறிலங்கா பொது ஜன பெரமுன 3 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியில் ஒரு உறுப்பினரும் மொத்தமாக 6 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

ஶ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் 3 உறுப்பினர்களும் , சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 3 உறுப்பினர்களும், ஜே.வி.பி கட்சியின் உறுப்பினர் ஒருவரும் , ஐக்கிய தேசியக் கட்சியின் 7 உறுப்பினர்களும் மொத்தமாக 14 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர். எனவே 8 மேலதிக வாக்குகளால் 2023 ம் வருடத்திற்கான வரவு செலவு திட்டம் லுணுகலை பிரதேச சபையில் தோற்கடிக்கப்பட்டது.

லுணுகலை பிரதேச சபையின் தவிசாளர் சிறிலங்கா பொது ஜன பெரமுனவை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மீண்டெழும் கூட்டங்களை நிறுத்தியது மொட்டு..!

Fourudeen Ibransa
1 year ago

ஜனாதிபதியும் பிரதமரும் இன்னமும் தமது தவறுகளை திருத்திக்கொள்ள வில்லை.!

Fourudeen Ibransa
2 years ago

அம்பாந்தோட்டையில் இரு குழுக்கள் இடையே மோதல் – வானை நோக்கி துப்பாக்கிச்சூடு…!

Fourudeen Ibransa
1 year ago