லுணுகலை பிரதேச சபையின் , 2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று தோற்கடிக்கப்பட்டது.
பாதீட்டுக்கு ஆதரவாக 6 வாக்குகளும் எதிராக 14 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இரு உறுப்பினர்கள், சிறிலங்கா பொது ஜன பெரமுன 3 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியில் ஒரு உறுப்பினரும் மொத்தமாக 6 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
ஶ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் 3 உறுப்பினர்களும் , சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 3 உறுப்பினர்களும், ஜே.வி.பி கட்சியின் உறுப்பினர் ஒருவரும் , ஐக்கிய தேசியக் கட்சியின் 7 உறுப்பினர்களும் மொத்தமாக 14 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர். எனவே 8 மேலதிக வாக்குகளால் 2023 ம் வருடத்திற்கான வரவு செலவு திட்டம் லுணுகலை பிரதேச சபையில் தோற்கடிக்கப்பட்டது.
லுணுகலை பிரதேச சபையின் தவிசாளர் சிறிலங்கா பொது ஜன பெரமுனவை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இணைந்திருங்கள்