தளம்
இந்தியா

இந்தியா-அவுஸ்திரேலியா இடையே பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து….!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (ஏஐ-இசிடிஏ) என்கிற வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம் கடந்த ஏப்ரல் மாதம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை. இந்தியாவில், இத்தகைய ஒப்பந்தங்கள் மத்திய அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்படுகின்றன.

இந்த நிலையில் இந்தியாவுடன் தடையற்ற வர்த்தகம் மேற்கொள்வதற்கான ஏஐ-இசிடிஏ ஒப்பந்தத்துக்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் நேற்று ஒப்புதல் அளித்தது. இதனை ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் டுவிட்டரில் தெரிவித்தார்.

இது குறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதில் மகிழ்ச்சி. நமது ஆழமான நட்பின் விளைவாக, இது எங்கள் வர்த்தக உறவுகளின் முழு திறனை அடைவதற்கும், பெரிய பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதற்கும் வழி வகுக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

18 வயதில் 16 வயது மாணவியுடன் காதல்.!

Fourudeen Ibransa
3 years ago

மீண்டும் அரசியலில் நுழைகிறாரா சசிகலா?

Fourudeen Ibransa
3 years ago

சிறார்கள் சம்மதத்துடன் உறவு கொள்வது குற்றமாகாது: டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு….!

Fourudeen Ibransa
1 year ago