தளம்
சிறப்புச் செய்திகள்

அரிசி இறக்குமதியை உடனடியாக இடைநிறுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல்.!

அரிசி இறக்குமதியை உடனடியாக இடைநிறுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

அமைச்சர் மஹிந்த அமரவீர விடுத்த கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி விக்ரமசிங்க தனது சிரேஷ்ட ஆலோசகர் ஆர்.எச்.எஸ் சமரதுங்கவிடம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

800,000 ஹெக்டேயர் நெல் வயல்களில் 675,000 ஹெக்டேயர் நிலத்தில் விவசாயிகள் ஏற்கனவே பயிர்ச்செய்கையை ஆரம்பித்துள்ளதாலும், 2023 ஆம் ஆண்டு அரிசி தட்டுப்பாடு ஏற்படுமெனவும் கவலையில்லை என அமைச்சர் அமரவீர ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது, சில விவசாயிகள் மூன்று பருவகால அறுவடைகளை கையிருப்பில் வைத்திருப்பதாகவும், எனவே இறக்குமதியை நிறுத்த வேண்டும் எனவும் அமைச்சர் அமரவீர ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.

அதன்படி வர்த்தமானியை வெளியிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.2021 மஹா பருவம் தோல்வியடைந்ததால், நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற கவலைகள் எழுப்பப்பட்டன.

Related posts

நிறைவுக்கு வரும் எரிபொருள் வரிசைகள்…!

Fourudeen Ibransa
2 years ago

பூஸா சிறையிலுள்ள கைதிகளிடமிருந்து கைபேசிகள் மீட்பு.!

Fourudeen Ibransa
1 year ago

தற்காலிக தஞ்சம் கோரி சற்றுமுன் சிங்கப்பூர் தப்பியோட்டம்?

Fourudeen Ibransa
2 years ago