தளம்
கிழக்கு மாகாணம்

கடற்ரையில் சிரமதான பணி- கல்முனை பிரதேச இளைஞர் நல்லிணக்க குழு உறுப்பினர்கள் பங்கேற்பு

பாறுக் ஷிஹான்

சுற்று சூழலை சுத்தமாக வைத்திருக்கும் முகமாக ஜிசேர்ப்(GCERF)நிறுவனத்தின் நிதியுதவியுடன்  ஹெல்விடாஸ்(HELVETAS) அனுசரணையில் சமாதானமும் சமூக பணி(PCA)நிறுவனத்தினால் அம்பாறை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வை-சென்ச்(y-change) திட்டத்தின், கீழ் உள்ள கல்முனை பிரதேச இளைஞர் நல்லிணக்க குழுக்களின் உறுப்பினர்கள் ஒன்றினைந்து கல்முனை மாநகரசபையின் ஒத்துழைப்புடன் கல்முனை கடற்கரை பகுதியில் சிரமதான பணி இன்று(11)முன்னெடுக்கப்பட்டது.

இதில் இளைஞர்கள்,யுவதிகள்,ஒன்றிணைந்து சிரமதான பணியினை மேற்க்கொண்டனர்.சமாதான தொண்டர்களான ரி.டிலக்சினி,எம்.எஸ். றக்சானா,டி.சாலினி எம்.எம்.எம்.அஹ்னாப்ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை பிரதேச இளைஞர் நல்லிணக்ககுழுவின் தலைவர் எம்.என்.எம்.அப்ராஸ்,எஸ்.டினோசா ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றதுடன்,இதன் போது வை-சேன்ச் (y-change) திட்டத்தின் திட்ட இணைப்பாளர் ஐ.சுதாவாசன்,நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர்கள்கே.டி.ரோகிணி, எம்.எல்.ஏ.மாஜீத்,ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

திருகோணமலையில் மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் நஞ்சருந்தி தற்கொலை.!

Fourudeen Ibransa
3 years ago

ஹோட்டல் அறையில் பிரித்தானியர் சடலமாக மீட்பு

Fourudeen Ibransa
3 years ago

கோத்தபாய அரசுக்கு அரபு நாடுகள் உதவி செய்ய தயார் இல்லை!

Fourudeen Ibransa
2 years ago