தளம்
இந்தியா

பிரசித் கிருஷ்ணாவை டெஸ்ட் போட்டிகளுக்கும் பரிசீலிக்கலாம்.!

இந்திய அணியின் புதிய பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவை, டெஸ்ட் போட்டிக்கு தேர்வு செய்வது குறித்தும் இந்திய அணி நிர்வாகம் யோசிக்க வேண்டுமென்று கருத்து கூறியுள்ளார் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர்.அவர் கூறியுள்ளதாவது, “பிரசித் கிருஷ்ணாவின் லைன் அன்ட் லென்த் நன்றாக உள்ளது.

இதன்படி, கடந்த 2018ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பும்ராவை பயன்படுத்தியதுபோல் பிரசித் கிருஷ்ணாவையும் பயன்படுத்தலாம்.

அவரின் சீம் பெளலிங் சிறப்பாக உள்ளது. எனவே, இந்திய தேர்வு கமிட்டி, சிவப்பு பந்து டெஸ்ட் போட்டிகளுக்கு, பிரசித் கிருஷ்ணாவை தேர்ந்தெடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும். அவர், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளிலிருந்து, தற்போது டெஸ்ட் போட்டிகளுக்கு ஏற்ற ஒரு பந்துவீச்சாளராகவும் மாறி வருகிறார்” என்றுள்ளார் கவாஸ்கர்.

பிரசித் கிருஷ்ணா இப்போதுவரை 9 முதல்தர போட்டிகளில் ஆடி, மொத்தமாக 34 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். மேலும், மொத்தம் 50 ‘ஏ’ நிலை போட்டிகளில் ஆடி, 87 விக்கெட்டுகளை சாயத்துள்ளார்.

Related posts

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 17 வயது சிறுவன் கைது!

Fourudeen Ibransa
3 years ago

‘ஊழலில் ஈடுபடும் எவரும் தப்ப முடியாது’ – பிரதமர் மோடி எச்சரிக்கை…!

Fourudeen Ibransa
2 years ago

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை…!

Fourudeen Ibransa
1 year ago