தளம்
இலங்கை

புதிய அரசியலமைப்பில் பௌத்தத்திற்கு முன்னுரிமை; சுதந்திரக் கட்சி பரிந்துரை!

புதிய அரசியலமைப்பில் பௌத்தத்திற்கு அதிக முன்னுரிமை வழங்கும் யோசனையினை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீண்டும் முன்வைத்துள்ளது. புதிய அரசியலமைப்பின் வரைபு தொடர்பான நிபுணர் குழுவிடம் நேற்று சனிக்கிழமை மாலை கட்சியின் யோசனைகளை முன்வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அக்கட்சியின் பிரதித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா இவ்வாறு கூறியுள்ளார்.

அத்தோடு, அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பது குறித்த சரத்துக்களை வலுப்படுத்தும் திட்டத்தையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விலங்கு பாதுகாப்பு குறித்த பரிந்துரைகளையும் முன்வைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.மாகாண சபை முறையை வலுப்படுத்துவது குறித்தும் முன்னுரிமை வாக்களிப்பு முறையை இரத்து செய்யவும் தேர்தல்களில் 25% பெண் பிரதிநிதித்துவம் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளதாக நிமல் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

மக்களுக்காக மக்களின் அரசாங்கம் என்ற ஜனநாயகக் கோட்பாடு முற்றிலும் பொய்.!

Fourudeen Ibransa
2 years ago

செய்த பாவங்களுக்கு மிகவும் வேதனையான கர்மவினையை சந்திக்க நேரிடும்…!

Fourudeen Ibransa
1 year ago

ஐஎம்எவ் கடன் தாமதமாகலாம்…!

Fourudeen Ibransa
2 years ago