தளம்
சிறப்புச் செய்திகள்

மூடிய அறைக்குள் இருக்கும் றிசாத்.!

24 மணிநேரமும் மூடிய அறைக்குள் அடைத்து வைத்து மலசலகூடத்துக்கு மட்டும் வெளியில் செல்ல அனுமதிப்பதாக, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் 102 நாட்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ஜனாதிபதியும் பிரதமரும் இந்தச் சபையில் இருக்கின்றார்கள்.

என்னை கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி கைது செய்தார்கள். வெறும் 5 நாட்கள் மாத்திரமே என்னை விசாரணை செய்தார்கள். 102 நாட்கள் என்னை தடுத்துவைத்துள்ளார்கள். 97 நாட்கள் வரையில் அறையில் அடைத்து வைத்துள்ளார்கள். 24 மணி நேரமும் அந்த அறை மூடப்பட்டு, மலசலகூடத்துக்கு மட்டும் என்னை வெளியில் செல்ல அனுமதிக்கிறார்கள்.

இன்றுவரை எந்தவிதமான விசாரணைகளும் இடம்பெறவில்லை. நான் பொய் கூறவில்லை. வேண்டுமென்றால் வந்து பார்க்க முடியும்.

ஜனாதிபதி அவர்களே, இன்னுமொரு விடயம். என்னைக் கைது செய்தபோது, பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் ‘என்னை ஏன் கைது செய்கிறீர்கள்?’ என்று நான் கேட்டபோது, எனது அமைச்சில் பணிபுரிந்த மேலதிக செயலாளர் பாலசுப்பிரமணியத்துடன், ஒன்றரை நிமிடம் தொலைபேசியில் உரையாடியதாக கூறினார்கள். இதனால்தான் என்னை கைது செய்துள்ளதாக கூறினார்கள். வேறு எந்தக் காரணமும் இல்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

பிசுபிசுத்தது மஹிந்த கூட்டிய ஆளுங்கட்சித் தலைவர்கள் கூட்டம்: விமல், கம்மன்பில, வாசு வெளிநடப்பு!

Fourudeen Ibransa
3 years ago

வழக்கு விசாரணை தொடர்பாக உயர் நீதிமன்ற அறிவிப்பு!

Fourudeen Ibransa
3 years ago

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எடுத்த முடிவு உண்மையில் கடினமான முடிவுதான்.!

Fourudeen Ibransa
2 years ago