தளம்
சிறப்புச் செய்திகள்

நாட்டின் சில இடங்களில் மழைக்கான சாத்தியம்.!

புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையில் இருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

காலியில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் சிலாபத்தில் இருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை : காலியில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் சிலாபத்தில் இருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். சிலாபத்தில் இருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

Related posts

இலங்கைக்கு உதவுவோம் – IMF குழு ஜனாதிபதியிடம் உறுதி!

Fourudeen Ibransa
2 years ago

அரசாங்கம் தனது வங்குராேத்து நிலைமையை மறைப்பதற்காக மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை, பீதியை ஏற்படுத்தக்கூடாது.!

Fourudeen Ibransa
3 years ago

‘என் சாவுக்கு காரணம்’ – ரிஷாட் வீட்டில் ஹிஷாலினியின் அறையில் இருந்து பெறப்பட்ட ஆதாரம்!

Fourudeen Ibransa
3 years ago