தளம்
தொழில்நுட்பம்

புது ஸ்மார்ட்போன்கள் இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்திய மோட்டோரோலா

மோட்டோரோலா நிறுவனம் விரைவில் எட்ஜ் 20 மற்றும் எட்ஜ் 20 பியூஷன் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ எட்ஜ் 20இ எட்ஜ் 20 லைட் மற்றும் எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் கடந்த மாத இறுதியில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. தற்போது எட்ஜ் 20 சீரிஸ் இந்திய வெளியீட்டை மோட்டோரோலா உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலும் புது ஸ்மார்ட்போன்களுக்கான டீசரை மோட்டோரோலா வெளியிட்டு இருக்கிறது.

தற்போதைய டீசர்களின் படி மோட்டோரோலா எட்ஜ் 20 மற்றும் எட்ஜ் 20 பியூஷன் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வெளியிடப்பட இருக்கின்றன. எட்ஜ் 20 பியூஷன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட எட்ஜ் 20 லைட் மாடலின் ரி-பிராண்டு செய்யப்பட்ட வேரியண்ட் ஆகும். மற்றபடி எட்ஜ் 20 ஸ்மார்ட்போன்இ சர்வதேச சந்தையில் அறிமுகமான வேரியண்டே இங்கும் அறிமுகமாகும் என தெரிகிறது.

அம்சங்களை பொருத்தவரை எட்ஜ் 20 மற்றும் எட்ஜ் 20 பியூஷன் மாடல்களில் 6.7 இன்ச் ழுடுநுனு பேனல்இ குர்னு10 1080×2400 பிக்சல் ரெசல்யூஷன் வழங்கப்படுகிறது. மோட்டோரோலா எட்ஜ் 20 மாடலில் ஸ்னாப்டிராகன் 778 பிராசஸர்இ அதிகபட்சம் 8 ஜிபி ரேம்இ 256 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. எட்ஜ் 20 பியூஷன் மாடலில் டிமென்சிட்டி 720 பிராசஸர்இ அதிகபட்சம் 8 ஜிபி ரேம்இ 128 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது.

இரு ஸ்மார்ட்போன்களிலும் ஆண்ட்ராய்டு 11 ஒ.எஸ்.இ எட்ஜ் 20 மாடலில் 108 எம்.பி. பிரைமரி கேமராஇ 16 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்இ 8 எம்பி டெலிபோட்டோ கேமராஇ 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.

Related posts

நீண்ட நேரம் தொலைபேசியை பயன்படுத்த வேண்டாம்.!

Fourudeen Ibransa
2 years ago

மின்வெட்டுக் காலத்தில் மெழுகுதிரி உற்பத்தியை பெருக்குவோம்

Fourudeen Ibransa
2 years ago

எதிரி நாட்டு ஏவுகணை தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வகையில் அதிநவீன தொழில்நுட்பம்!

Fourudeen Ibransa
3 years ago