தளம்
சிறப்புச் செய்திகள்

கொரோனாவைக் குணப்படுத்தும் மேலும் மூன்று மருந்துகள் ஆய்வு

கொரோனாவை குணப்படுத்தும் மருந்தை கண்டறிய உலக சுகாதார நிறுவனம் சார்பில் 52 நாடுகளில் உலகளாவிய ஆராய்ச்சி நடந்து வருகிறது. இதில்இ ரெம்டெசிவிர்இ ஹைட்ராக்சிகுளோரோகுயின் உள்ளிட்ட 4 மருந்துகள் ஆய்வு செய்யப்பட்டன. அவை பயனற்றவை என்று முடிவு செய்யப்பட்டன.

இந்தநிலையில்இ வேறு நோய்களை குணப்படுத்த பயன்படுத்தப்படும் மேலும் 3 மருந்துகளை அடுத்தகட்ட ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்போவதாக உலக சுகாதார அமைப்பு நேற்று அறிவித்தது.

மலேரியாவுக்கு பயன்படும் அர்டிசுனேட்இ புற்றுநோய் மருந்தான இமடினிப்இ நோய் எதிர்ப்பு சக்திக்கு பயன்படும் இன்பிளிக்சிமேப் ஆகிய மருந்துகள் பரிசோதிக்கப்பட உள்ளன.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் கொரோனாநோயாளிகள் உயிரிழப்பதை இவை தடுக்கும் என்ற நம்பிக்கையில் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.

Related posts

நாட்டைப் பற்றியும் சிந்திக்க வேண்டும்!

Fourudeen Ibransa
3 years ago

எதிரணிகளின் பகல் கனவும் பழிக்காது.” 

Fourudeen Ibransa
2 years ago

இலங்கையில் டொலர் கையிருப்பில் ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் இறக்குமதியில் பிரச்சினை.!

Fourudeen Ibransa
2 years ago