தளம்
மலையகம்

கம்பனிகளின் அடாவடிகளைத் தட்டிக்கேட்பது யார்.!

தொழிலாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் சம்பள நிர்ணய சபையில் எடுக்கப்பட்டது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியானது. இதன்பிரகாரம் அரச விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொழிலாளர்கள், தொழில் செய்யும்பட்சத்தில் அவர்களுக்கு ஒன்றரை நாள் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்ற சட்ட ஏற்பாடும் உள்ளது.

தாங்கள்தான் பெரிய தொழிற்சங்கம் என மார்தட்டிக்கொண்டு, கம்பனிகளுடன் உறவாடும், அரச பலமுடைய தொழிற்சங்கங்கள் இதனை கண்டுகொள்வதில்லை. கம்பனிகளின் அடாவடிகளைத் தட்டிக்கேட்பதில்லை. வர்த்தமானி அறிவித்தலைக்கூட பலவீனமானதாக மாற்றியமைத்துள்ள கம்பனிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இது தொடர்பில் தொழிலாளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, சட்டரீதியாக அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே தொழிற்சங்க பொறிமுறை செயற்பட வேண்டும் என்றுள்ளது.

Related posts

மலையகம் 200′ எனும் தொனிப்பொருளின்கீழ் பல்வேறு நிகழ்வுகள்!

Fourudeen Ibransa
1 year ago

பதுளையில் மாணவி கொலை! நடந்தது என்ன?

Fourudeen Ibransa
2 years ago

ஐக்கிய மக்கள் கூட்டணி ’22’ இற்கு நிபந்தனையுடன் ஆதரவு!

Fourudeen Ibransa
2 years ago