தளம்
மலையகம்

‘தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்காக, நுவரெலியாவில் ஒரு கல்லுாரி அமைக்க வேண்டும். ”

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொது செயலாளர் வைகோவை இலங்கை வருமாறு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னையில் இன்று வைகோவை சந்தித்து பேசிய அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட வைகோ,

”26 வயதில், நீங்கள் அமைச்சர் பொறுப்பு ஏற்று இருக்கிறீர்கள். என் வாழ்த்துகள். தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட வேண்டும். உங்களுக்கு நிறைய கடமைகள் உள்ளன,” என்றார்.

இதற்கு பதிலளித்து பேசிய ஜீவன் தொண்டமான், ‘தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்காக, நுவரெலியாவில் ஒரு கல்லுாரி அமைக்க வேண்டும். ”தமிழக அரசின் ஆதரவை எதிர்பார்க்கிறோம்.

அதற்காக, முதல்வரையும் சந்திக்க இருக்கிறேன். நீங்கள் இலங்கைக்கு வந்து, தோட்டத் தொழிலாளர்களை சந்திக்க வேண்டும்,’ என கூறியுள்ளார்.

Related posts

மலையகத்திற்கான அபிவிருத்திகள் தொடர்பாக தமிழக முதலமைச்சருடன், ஜீவன் தொண்டமான் கலந்துரையாடல்

Fourudeen Ibransa
3 years ago

மலையக அடையாளத்தை தொலைக்கும் விதத்தில் எம்மால் செயற்பட முடியாது.

Fourudeen Ibransa
2 years ago

மலையகம் 200′ எனும் தொனிப்பொருளின்கீழ் பல்வேறு நிகழ்வுகள்!

Fourudeen Ibransa
1 year ago