தளம்
வட மாகாணம்

எது நியாயமோ எது சரியோ அதை யார் செய்தாலும் சரி என்பேன்.!

நான் தமிழரசு பாரம்பரியத்தில் வந்தவன். தன் பக்க கோலடிக்கும் தேவை எனக்கு கிடையாதென வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எது நியாயமோ எது சரியோ அதை யார் செய்தாலும் சரி என்பேன் அதே பிழை என்றால் பிழை என்று கூறுவது என்னுடைய பொறுப்பு. இனி நான் பயப்படமாட்டேன். இதுவரை நான் அடக்கி வாசித்தேன். என் தலையில் மிளகாய் அரைக்கலாம் என்று சிலர் நினைக்கிறார்கள்.

ஒரு சிலரை தாக்குவதாக நினைத்துக்கொண்டு தமிழரசுக் கட்சியை தாக்குகின்றனர். தமிழரசுக் கட்சியை ஓரங்கட்ட நினைப்பது பகல் கனவு. எந்த கொம்பனாலும் அதனை அழிக்க முடியாது. பங்காளி கட்சிகள் போகப் போகிறோம் என முடிவெடுத்தால் அதை நாங்கள் தடுக்க முடியாது ஆனால் அவர்கள் அவ்வாறான ஒரு முடிவை எடுக்கமாட்டார்கள் என்றே நான் கருதுகிறேன்.

தமிழரசுக்கட்சி மனித உரிமை ஆணைக்குழுவுக்கு கடிதம் எழுதியது தொடர்பாக கேள்வியெழுப்பிய போது, என்னைப்பொறுத்தவரையில் ஊடகச் செய்திகளைப் பார்க்கும் பொழுது சில செய்திகளில் உண்மை இல்லை என்றே தெரிகிறது.

புலிகள் மீதும் விசாரணையை வலியுறுத்தும் ஒரு கடிதத்தை எனக்கு தெரிய மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தமிழரசுக் கட்சி சார்ந்து அனுப்பியதாக இல்லை. அதை மட்டும் என்னால் உறுதியாக கூற முடியும். அவ்வாறு எழுதினால் நான் அதனை வெளிப்படுத்துவேன்.

கூட்டமைப்பு தேசிய தலைவரால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும் ஆகவே அது உடைந்து போவதை நான் தனிப்பட்ட முறையில் விரும்ப மாட்டேன் என்றார்.

Related posts

முதலமைச்சர் வேட்பாளராக மணிவண்ணன்?

Fourudeen Ibransa
3 years ago

அரசாங்கத்திற்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தை.!

Fourudeen Ibransa
3 years ago

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஐந்தாவது மருத்துவ மாணவர் ஆராய்ச்சி மாநாடு..!

Fourudeen Ibransa
1 year ago