தளம்
கொழும்பு

லொஹான் ரத்வத்த குறித்து அமைச்சர் விமல் வீரவன்ச வெளியிட்டுள்ள கருத்து

அனுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தை அடுத்து லொஹான் ரத்வத்த சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு கைதிகள் புனர்வாழ்வு  ராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளமை போதுமான விடயம் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இடம்பெற்ற சம்பவத்திற்கு பொறுப்பை ஏற்று பதவி விலகி உள்ளமை பெரிய விடயம் என அவர் கூறியுள்ளார்.

நாட்டில் இதற்கு முன்னரும் இவ்வாறான முன்னுதாரணங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் ஆனால் லொஹான் ரத்வத்த பதவி விலகி தனது தவறை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் விமல் வீரவன்ச கூறினார்.

லொஹான் ரத்வத்த மாணிக்க கல் மற்றும் சுவர்ணாபரண ராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து விலக வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் ஏதேனும் நகை கொள்ளையில் ஈடுபட்டு இருந்தால் அந்த அமைச்சு  பதவியிலிருந்து விலக வேண்டும் என விமல் வீரவங்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கு நிதி கிடைப்பதற்கு ரிஷாட் உதவினார்: சரத் வீரசேகர

Fourudeen Ibransa
3 years ago

பிரதமர் முன்னிலையில் உறுதிமொழியேற்ற 153 தாதியர்கள் சேவையில் இணைவு

Fourudeen Ibransa
2 years ago

காணாமல் போன சிறுமிகள் வீடு திரும்பினர்! – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

Fourudeen Ibransa
2 years ago