தளம்
சிறப்புச் செய்திகள்

மதுபானசாலைகளை திறந்து விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் போலியானது

நாட்டில் இன்று முதல் மதுபான சாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியான போலி செய்தியை அடுத்து நாட்டின் பல பாகங்களிலும் உள்ள மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மதுபானசாலைகள் திறந்தவுடன் பொது மக்கள் மதுபானம் கொள்வனவு செய்வதற்காக பெருமளவில் திரண்டுள்ளனர்.

எனினும் மதுபானசாலைகளை திறந்து விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் போலியானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கொழும்பு ஊடகம் ஒன்று மதுவரித் திணைக்கள ஆணையாளரிடம் கேள்வி எழுப்பியபோது, மதுபானசாலைகள் மற்றும் விற்பனை நிலையங்களில் பியர் போத்தல்கள் மற்றும் கொள்கலன்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படும் விடயம் உண்மைக்கு புறம்பானது என்பதுடன் அவ்வாறு எந்தவொரு அனுமதியும் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ள நிலையில் பொது மக்கள் சுகாதார விதிமுறைகளை மீறி இவ்வாறு அசமந்தப் போக்குடன் செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி கோட்டா சிங்கப்பூர் செல்லத் தடை.!

Fourudeen Ibransa
2 years ago

முட்டை வீச்சு தாக்குதலால் எமது அரசியல் பயணத்தை நிறுத்தவும் முடியாது.

Fourudeen Ibransa
2 years ago

இந்திய கடன் வசதி மற்றும் உலக வங்கி கடனுதவியின் கீழ் எரிவாயு விநியோகம்.!

Fourudeen Ibransa
2 years ago