தளம்
Breaking News

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவை எவராலும் பிரிக்கவே முடியாது.!

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவை எவராலும் பிரிக்கவே முடியாது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இந்தியாவின் குஷி நகரிலுள்ள விமான நிலையமானது, சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்தப்பட்டு, இன்று 20ஆம் திகதி திறந்துவைக்கப்படவுள்ளது. குறித்த விமான நிலையத்துக்கு இலங்கையில் இருந்தே முதலாவது விமானம் செல்கின்றது. அந்த விமானத்தில் 100 பிக்குகள் செல்கின்றனர். அமைச்சர் நாமல் ராஜபக்சவும் பயணிக்கின்றார்.

முதலாவதாக அங்கு தரையிரங்கும் விமானத்தை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பார். இது இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பாகும்.

இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையிலான இரு தரப்பு உறவென்பது இரு விடயத்தையோ அல்லது வேலைத்திட்டத்தையோ மையப்படுத்தியது அல்ல. அது சகல விடயங்களையும் உள்ளடக்கியது. இதற்கான அடித்தளமாக பௌத்த தர்மமே விளங்குகின்றது” என்றார்.

Related posts

அவசர கூட்டத்திற்கு பிரதமர் ரணில் அழைப்பு! ஜனாதிபதியாக ரணில்..!

Fourudeen Ibransa
2 years ago

 இம்ரான்கன் உயிருக்கு ஆபத்து.!

Fourudeen Ibransa
2 years ago

ஐரோப்பாவில் நடந்தால் மட்டும் தான் ‘போரா?’

Fourudeen Ibransa
2 years ago