தளம்
சிறப்புச் செய்திகள்

இலங்கையில் பசு வதையை தடை செய்ய அமைச்சரவையில் தீர்மானம்.1

இலங்கையில் பசு வதையை தடை செய்வதற்காக ,அதனுடன் தொடர்புபட்ட 05 சட்டங்கள் மற்றும் கட்டளைச்சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான திருத்த சட்ட மூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், அதனைத்தொடர்ந்து அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

07.          இலங்கையில் பசு வதையைத் தடை செய்தல்

உள்ளூர் விவசாயத்துறை மற்றும் உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக பசு வதை செய்வதை தடை செய்வதற்கும், அதற்கு ஏற்புடைய சட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகளையும், விலங்கு அறுப்பு தொடர்பான உள்ளூராட்சி மன்றங்களால் நிறைவேற்றப்பட்டுள்ள துணைச் சட்டங்களைத் திருத்தம் செய்வதற்கும், 2020 செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கீழ் குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்கள்ஃகட்டளைச் சட்டங்களைத் திருத்தம் செய்வதற்காக சட்ட வரைஞர் அவர்களால் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலம் அரசியலமைப்பு ஏற்பாடுகளுக்கு இணங்கவில்லை என சட்டமா அதிபர் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார். அதற்கமைய, குறித்த சட்டமூலங்களை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்காகவும் கௌரவ பிரதமர் அவர்கள்: அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்: மற்றும் விவசாய அமைச்சர் சமர்ப்பித்த கூட்டு யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

Related posts

கொழும்பு மருத்துவமனையில் பதற்றம் கைக்குண்டு மீட்பு!

Fourudeen Ibransa
3 years ago

ஜனாதிபதி மாளிகையில் திருடிய மூவர் கைது!

Fourudeen Ibransa
2 years ago

“போர் வேண்டாம்” – ரஷ்யா, உக்ரைனிடம் தமிழ்க் கூட்டமைப்பு கோரிக்கை

Fourudeen Ibransa
2 years ago