தளம்
தென் பகுதி

நாடு மீண்டும் முடக்கப்படுமா?

பொது மக்களின் கவனக்குறைவான நடத்தைகளின் காரணமாக நாட்டில் கோவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்குமாயின் நாட்டை முடக்க வேண்டிய நிலை ஏற்படுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன (Dr. Asela Gunawardena) தகவல் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் தற்போது வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களை முறையாகப் பின்பற்ற வேண்டும். மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் பலர் சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதுடன், அவர்களில் பலர் குறைந்தபட்சம் முகக்கவசத்தினை கூட அணியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

பொது மக்களின் அலட்சியம் காரணமாக தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது மீண்டும் தேவையில்லாமல் நம்மை கட்டுப்படுத்த வேண்டிய தேவை ஏற்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், குறைந்தபட்சம் டிசம்பர் இறுதி வரை சுகாதார பழக்கவழக்கங்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

நாடு இன்று பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.!

Fourudeen Ibransa
2 years ago

ஒரு நாட்டை காட்டுச்சட்டத்தால் ஆள முடியாது.!

Fourudeen Ibransa
2 years ago

எனக்கு வழங்கிய உறுதிமொழியை சஜித் மீறமுடியாது’ – பொன்சேகா

Fourudeen Ibransa
2 years ago