தளம்
சிறப்புச் செய்திகள்

உள்ளாட்சிசபைத் தேர்தலை ஒத்திவைக்கும் அரசின் முடியாவது ஏற்புடையதல்ல.!

உள்ளாட்சிசபைத் தேர்தலை ஒத்திவைக்கும் அரசின் முடியாவது
ஏற்புடையதல்ல – என்று அரச பங்காளிக்கட்சியான லங்கா சமசமாஜக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

உள்ளாட்சி மன்றங்களின் பதவிக்காலம் ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிட்ட மேற்படி கட்சியின் பிரமுகரான நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ வித்தாரண கூறியவை வருமாறு,

” உரிய காலப்பகுதிக்குள் ,உரிய வகையில் தேர்தலை நடத்துவதே சிறந்த ஜனநாயக பண்பாகும். அந்த வகையில் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதை ஏற்கமுடியாது. எனினும், விசேட காரணமொன்றுக்காக, அனைத்து கட்சிகளின் இணக்கப்பாட்டுடன்
குறுகிய காலப்பகுதிக்கு அதனை செய்யலாம். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அவ்வாறு செய்வதற்கான தேவை எழவில்லை. அந்தவகையில் பதவி காலம் நீடிப்பானது ஏற்புடைய நடவடிக்கை அல்ல. தேர்தல் நடத்தப்பட வேண்டும்.” – என்றார்.

அதேவேளை, அரச பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் உள்ளாட்சிமன்ற
தேர்தல் ஒத்திவைப்புக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி ​மாளிகையில் குடும்பமே கூடியது.!

Fourudeen Ibransa
2 years ago

உள்ளூராட்சிமன்றத்திற்கு புதிய உறுப்பினர்களை நியமிக்க ரணிலிற்கு நீதிமன்றம் தடை!

Fourudeen Ibransa
3 years ago

பாராளுமன்றத்தை நோக்கி நகரும் போராட்டக்காரர்கள் !

Fourudeen Ibransa
2 years ago