தளம்
இன்றைய நிகழ்வுகள்

பாவேந்தல் பாலமுனை பாறூக்கின் பொன்விழாக் கொண்டாட்டம் பாலமுனையில் !

நூருல் ஹுதா உமர்

கலாபூஷணம் பாவேந்தல் பாலமுனை பாறூக் அவர்களின் இலக்கியப் பயணத்தின் பொன்விழாக் கொண்டாட்ட நிகழ்வுகள் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக தொழிநுட்ப பீடத்தின் பீடாதிபதி யூ.எல். அப்துல் மஜீத் தலைமையில் பாலமுனையில் இன்று மாலை நடைபெற்றது.

கவிதை, குறுங்காவியம், குறும்பா, நாவல், சிறுகதை, கட்டுரை, கஸல் மற்றும் ஹைக்கூ கவிதைகள் எனப் பல இலக்கிய வடிவங்களைச் சுவைபட எழுதுவதிலும், மொழிவதிலும் தனிச்சுவை கொண்ட அவரை பாராட்டி கௌரவிக்கும் இந்நிகழ்வில் தேசிய காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா, முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான றிப்கான் பதியுதீன், ஏ.எல். தவம், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. தாஹீர், அட்டாளைச்சேனை பிரதேச சபை உதவி தவிசாளர் எஸ்.எல்.எம். ஹனீபா, அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ. அன்ஸில், கிழக்கு மாகாண முதலமைச்சின் முன்னாள் செயலாளர் யூ.எல்.ஏ. அஸீஸ், கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் மொழித்துறை தலைவர் கலாநிதி செ. யோகராஜா, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.எம். றிபாஸ்தின், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா, இலங்கை இறைவரித்திணைக்கள உதவி ஆணையாளர் எம்.எம். முஸம்மில், முன்னாள் வலயக்கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம். காஸிம், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் ரீ.எம். றின்ஸான் உட்பட உலமாக்கள், சர்வதேச புகழ்பெற்ற எழுத்தாளர்கள், இலக்கிய ஆளுமைகள், அரச திணைக்களங்களின் உயரதிகாரிகள், கல்வியலாளர்கள், கலை, இலக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகைதந்த பல அமைப்புக்கள் அவருக்கு நினைவுச்சின்னம் வழங்கி பொன்னாடை போத்தி, தலைப்பாகை அனுவித்து, வாழ்த்துப்பா வழங்கி கௌரவித்தமை இங்கு சிறம்பம்சமாக இருந்தது.

Related posts

ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியேறிய போராட்டக்காரர்கள் !

Fourudeen Ibransa
2 years ago

10 வயது சிறுமியை பலாத்காரம் செய்த ஆசிரியர் கைது!

Fourudeen Ibransa
1 year ago

நத்தார் தின நிகழ்வில் பன்னாட்டு இராஜதந்திரிகளை சந்தித்தார் பிரதமர்!

Fourudeen Ibransa
2 years ago