தளம்
சிறப்புச் செய்திகள்

இலங்கை வருகிறார் அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர்!

மனித உரிமைகள், வர்த்தகம் மற்றும் முதலீடு சம்பந்தமாக பேச்சு நடத்துவதற்காக அமெரிக்காவின் உயர் அதிகாரி ஒருவர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு (Donald Lu)எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உதவி இராஜாங்க செயலாளராக பதவியேற்ற பின்னர், அவர் முதல் முறையாக இலங்கைக்கு விஜயம் செய்கிறார்.

டொனால்ட் லு, நேற்றுமுன்தினம் தொலைபேசியில் செய்தியாளர்கள் சிலருடன் பேசியுடன் அடுத்த மாதம் பங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் உலக தமிழர் பேரவை ஆகிய தரப்புடன் கடந்த நவம்பர் மாதம் வொஷிங்டனில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றிலும் டொனால்ட் லு கலந்துக்கொண்டார்.

Related posts

‘என் சாவுக்கு காரணம்’ – ரிஷாட் வீட்டில் ஹிஷாலினியின் அறையில் இருந்து பெறப்பட்ட ஆதாரம்!

Fourudeen Ibransa
3 years ago

சட்டமா அதிபரின் உதவியுடன் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ தலைவர் விடுதலை!

Fourudeen Ibransa
2 years ago

மொட்டு ஆட்சி கவிழாது’!

Fourudeen Ibransa
2 years ago