தளம்
சிறப்புச் செய்திகள்

உக்ரைனில் வாழும் இலங்கையர்களுக்கான விசேட அறிவித்தல்!

உக்ரைனில் தற்போது நிலவும் பதற்றநிலை காரணமாக அங்கு வசிக்கும் இலங்கையர்களுக்கு தேவையான தகவல்களை வழங்குவதற்காக விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உக்ரைனில் வசிக்கும் இலங்கையர்களுக்காக அங்காராவில் உள்ள இலங்கை தூதரகத்தில், 24 மணித்தியாலங்களும் இயங்கும் வகையில் உடனடி அழைப்பு நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, 00 90 534 456 94 98 அல்லது 00 90 312 427 10 32 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தூதரகத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவல்களை வழங்கவும், பெற்றுக்கொள்ளவும் முடியுமென அமைச்சு கூறியுள்ளது.

உக்ரைனில் பதற்ற நிலைமை மேலும் அதிகரித்துச் செல்வதால், அங்கு வாழும் இலங்கையர்களை பாதுகாப்பாக நாட்டிற்கு அனுப்புவதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அங்காராவில் அமைந்துள்ள தூதரகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

அரசாங்கம் இராணுவமயமாகிறது! 

Fourudeen Ibransa
2 years ago

புதிய கூட்டணிக்கான சின்னம் , பொதுப்பெயர் சனிக்கிழமை அறிவிக்கப்படும்!

Fourudeen Ibransa
1 year ago

ரணிலின் 17 வருட அரசியல் சகிப்புத்தன்மைக்கு கிடைத்த அங்கீகாரம்-.!

Fourudeen Ibransa
2 years ago