தளம்
மலையகம்

ஜனாதிபதி குறித்து மனோ கணேசன் வெளியிட்டுள்ள பதிவு!

கோட்டாபய தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் முகநூலில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், நிரந்தர மின்வெட்டு போர்க்காலத்தில் வடக்கில் இருந்தது. இப்போ, தெற்கில் ஒருபோதும் காணாத 7+ மணி மின்வெட்டு.

காரணம் டீசல் இல்லை. அதற்கு காரணம் டீசல் வாங்க டொலர் இல்லை.

அதற்கு காரணம், இதற்கு முன் இருந்த அரசுகள் வாங்கிய டொலர் கடனை, இன்று தானே கட்டி அடைக்கிறேன் என்கிறார், கோத்தா.

இப்படி இவர் சொல்லும் போது பக்கத்தில் வெட்கமில்லாமல் மகிந்த உட்கார்ந்திருக்கிறார். ஒட்டு மொத்த கடனில், 85%, கடந்த மகிந்த ஆட்சியில் வாங்கிய கடன் என்று நாம் புள்ளிவிபரபடி எடுத்து கூறினால் பதிலில்லை.

இவர்கள்தான் கப்பல் வரா துறைமுகம், விமானம் வரா விமான நிலையம், விளையாட்டு போட்டிகள் நடக்கா அரங்கம், முதலீடு வரா துறைமுக நகர், தாமரை தடாகம், தாமரை கோபுரம், எல்லாம் கட்டி கமிஷன், கமிஷனாக வாங்கி கடன் சுமையை கூட்டினார்கள்.

அடுத்து தனது எல்லா தோல்விகளுக்கும் “கோவிட்” தான் காரணம் என்கிறார், கோத்தா. “கோவிட்” உலகில் இலங்கைக்கு மட்டும்தான் வந்ததா? என்று கேட்டால் பதிலில்லை. ஆகவே ஜனாதிபதி கோத்தா என்ன சொல்கிறார்? என ம்னோகணேசன் பதிவிட்டுள்ளார்.

Related posts

ஆட்சி மாற்றம் வேண்டும்.!

Fourudeen Ibransa
2 years ago

சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி பலி – இறத்தோட்டையில் சோகம்..!

Fourudeen Ibransa
1 year ago

இலங்கை என்ற அழகிய தீவு ஒவ்வொரு நாட்டிற்கும் துண்டாடப்பட்டு விற்பனை .!

Fourudeen Ibransa
3 years ago