தளம்
Breaking News

பசில் ராஜபக்ஷவின் செயற்பாடுகள் நாட்டு மக்களை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.!

சமகால அரசாங்கத்தில் அங்கம் வகித்துள்ள பங்காளி கட்சிகளை வெளியேற்ற நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ திட்டமிடுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுஜன பெரமுன கட்சியை அல்லாத ஏனைய அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளையும் நீக்கிவிட்டு தனித்து ஆட்சியமைக்க பசில் திட்டமிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு ஆதரவான 11 கட்சிகளின் தலைவர்கள் உத்தியோகபூர்வமற்ற முறையில் அரசாங்கத்தில் இருந்து விலக தீர்மானித்துள்ளனர்.

இந்நிலையில் பசில் ராஜபக்ஷ இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொதுஜன பெரமுன கட்சியில் 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதால் பசில் ராஜபக்ஷ இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த பொதுத் தேர்தலின் போது சமகால அரசாங்கத்தின் வெற்றிக்கான பிரதான மூளையாக செயற்பட்டவர் பசில் ராஜபக்ஷ ஆகும்.

இதன்மூலம் பெரும்பான்மை பலத்துடன் அரசாங்கம் ஆட்சிப்பீடம் ஏறியது.

தற்போது பசில் ராஜபக்ஷவின் செயற்பாடுகள் நாட்டு மக்களை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதாக பல அமைச்சர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அவ்வாறானவர்களை ஆட்சியில் இருந்து அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தேசிய அரசமைக்கும் யோசனை ஏற்புடையது அல்ல. .!

Fourudeen Ibransa
2 years ago

துறவறத்தை துறக்கும் பிக்குகள்…!

Fourudeen Ibransa
2 years ago

2030 அளவில் இலங்கை வன அடர்த்தியை 32% ஆக உயர்த்துவதே இலக்கு..!

Fourudeen Ibransa
2 years ago