தளம்
சிறப்புச் செய்திகள்

ஹிருணிக்கா கைது?

புலிகளுடன் நேருக்கு நேர் போரிட்டதாக கூறிக்கொள்ளும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, எம்மை சந்திக்க தயங்குவது ஏன் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணி கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய மகளிர் அணியின் ஏற்பாட்டாளர் ஹிருணிக்க கூறியவை வருமாறு,

” ஜனாதிபதி செயலகம் செல்லாமல், ஜனாதிபதி வசிக்கும் வீடு ஏன் சுற்றிவளைக்கப்பட்டது என கேட்கின்றனர். ஜனாதிபதி செயலகம் சென்றால் நடக்கபோவது எதுவும் இல்லை. ஜனாதிபதிக்கு பிரச்சினை தெரிய வரப்போவதும் இல்லை. மனுக்கள் கொடுத்தாலும் அவை குப்பைத் தொட்டியில் வீசப்படும்.

எனவே, ஜனாதிபதி வசிக்கும் வீடு முன்னால் சென்றால் குறைந்தபட்சம் எமது குரலாவது கேட்டும் , பிரச்சினை தெரியவரும். ஜனாதிபதிக்கு புரியாவிட்டால்கூட பெண்ணான ஜனாதிபதியின் பாரியாருக்காவது, மகளிர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தெரியவரும். ஆனால் நாம் அங்குசென்றவேளை ஜனாதிபதியும், பாரியாரும் அநுராதபுரம் சென்றுள்ளனர். பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்தார். நாம் நாட்டு பிரச்சினையை சொல்வதற்கு சென்றவேளை, ஜனாதிபதி ஜோதிடம் பார்க்க அநுராதபுரம் சென்றுள்ளார்.

அரச சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கவோ அல்லது ஜனாதிபதியுடன் தனிப்பட்ட ரீதியில் முரண்படவோ நாம் செல்லவில்லை. பேச்சு நடத்தவே சென்றோம். ஜனாதிபதியாக இருந்தவர் இராணுவத்தில் இருந்தவர். புலிகளுடன் நேருக்கு நேர் போரிட்டவர் எனக் கூறிக்கொள்பவர். அப்படியான ஒருவர் எம்மை சந்திக்க தயங்குவது ஏன்?

அத்துடன், நாட்டு பிரச்சினையை எடுத்துரைக்கசென்ற எம்மை , குற்றவியல் சட்டத்தின்கீழ் கைது செய்வதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது என தகவல் கிடைத்துள்ளது.” – என்றார் ஹிருணிக்கா.

Related posts

இலங்கையில் பரவும் புதிய 5 கோவிட் திரிபுகள்!

Fourudeen Ibransa
3 years ago

இலங்கையில் பசு வதையை தடை செய்ய அமைச்சரவையில் தீர்மானம்.1

Fourudeen Ibransa
3 years ago

ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டும்..!

Fourudeen Ibransa
2 years ago