தளம்
சிறப்புச் செய்திகள்

மத்திய வங்கியிடம் நீண்டகால திட்டம் இல்லை..!

ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதார கொள்கை பிரிவின் உறுப்பினர்களுக்கும், மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கும் இடையில் இன்று முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று நடைபெற்றது.

மத்திய வங்கி கட்டடத் தொகுதியில் நடைபெற்ற இந்த சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதாரப் பிரிவின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்டி சில்வா, கபீர் ஹாசீம் மற்றும் எரான் விக்கிரமரத்ன ஆகியோர் பங்கேற்றனர்.

இதன்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் நிதி நெருக்கடி நிலைமைகள் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது. நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகள் பற்றியும் ஆராயப்பட்டுள்ளது.

” எனினும், மத்திய வங்கியிடம் நீண்டகால திட்டம் இல்லை. குறுகிய காலப்பகுதிக்கான திட்டமே உள்ளது. அதன்பின்னர் நெருக்கடியில் இருந்து மீண்டுவிடலாம் என நினைக்கின்றனர். கடன்களை எதிர்ப்பார்த்திருக்கின்றனர். ” என்று சந்திப்பின் பின்னர் ஹர்ச டி சில்வா கருத்து வெளியிட்டார்.

Related posts

ஒருநாள் தொடரையும் கைப்பற்றுமா இந்தியா?

Fourudeen Ibransa
1 year ago

எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு.!

Fourudeen Ibransa
2 years ago

நெருக்கடிக்கு அரசாங்கத்தில் எவரிடமும் தீர்வில்லை .!

Fourudeen Ibransa
2 years ago