தளம்
Breaking News

ஜனாதிபதி கோட்டாபய பதவி விலகலை ? எதிர்பார்த்து நிற்கும் பசில் .!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தற்போது செயல் இழந்த நிலையில் உள்ளார். அவரால் எதனையும் செய்ய கூடிய நிலையில் இல்லை என விமல் வீரவம்ச தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ள நிலையில். நெருக்கடிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பதவி விலகுவார் என பசில் ராஜபக்ச கணக்கிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். கோட்டபாய பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை, அவரது சொந்தக் கட்சிக்கு உள்ளே வலுப்பெற்று வருகிறது. அந்த சந்தர்ப்பத்தில் அரச ஆட்சியை தனது கையில் எடுப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதா என பசில் ராஜபக்ஷ யோசனை செய்து வருகின்றார் என்ற தகவலும் கூடவே கசிந்துள்ளது. அதன் பின்னர் அமெரிக்காவின் மூலோபாயத்திற்கமைய இலங்கையை வழிநடத்துவது குறித்து பசில் சிந்தித்து வருகிறார். சீனாவை நம்பி பயன் இல்லை என்றும், அமெரிக்கா மற்றும் இந்தியாவால் தான் இலங்கையை காப்பாற்ற முடியும் என்றும் பசில் நம்புகிறார். காரணம்…

எந்த ஒரு அரசாங்கம் இனி வந்தாலும் அடுத்த 20 ஆண்டுகளுக்கு இலங்கையை மீள கட்டி எழுப்பவே முடியாது. இந்த பாதாளத்தில் இருந்து இலங்கை வெளியே வர குறைந்தது 20 வருடங்கள் ஆகும். நாடு ஒரு போதும் மீண்ணெடழுவதற்கு வாய்ப்புகள் இல்லை என்பது இலங்கையில் உள்ள அனைத்து அரசியல் வாதிகளுக்கும் நன்றாக தெரியும். ஆட்சியை பிடித்தால் கூட, எதனையும் செய்ய முடியாது. இதனால் பலமான ஒரு வெளிநாட்டின் உதவி நிச்சயம் தேவை என்று பசில் கருதுகிறார். இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. இன் நிலையில் கோட்டபாய பதவி விலகுவாரா ? என்ற கேள்விகள் சிங்கள மக்களால் முன் வைக்கப்பட்டு வருகிறது.

Related posts

வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம்

Fourudeen Ibransa
2 years ago

 சூழ்ச்சிக்கார ராஜபக்ச அரசை வீட்டுக்கு அனுப்பும்வரை ஜனநாயக  போராட்டம் தொடரும்.’

Fourudeen Ibransa
2 years ago

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அனைத்தும் முன்னுரிமை அடிப்படையில் தீர்த்து வைக்கப்படும்.!

Fourudeen Ibransa
3 years ago