தளம்
சிறப்புச் செய்திகள்

‘5 நாடுகளுடன் ரணில் பேச்சு’

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடிக்கு நிவாரணம் பெற்றுக் கொள்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க ஐந்து நாடுகளுடன் பேச்சு நடத்தியுள்ளார்.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடனேயே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு பேச்சு நடத்தியுள்ளார்.

தற்போதைய நிலையைவிட எதிர்காலத்தில் உக்கிரமான உணவு பிரச்சனைக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை இலங்கைக்கு ஏற்படும் என மேற்படி நாடுகளின் பிரதிநிதிகள், ரணில் விக்ரமசிங்கவிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கைக்கு எவ்வாறு உதவி வழங்குவது என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அரசு சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டுக்கு வருவதாக இருந்தால் இலங்கைக்கு உதவி வழங்குவது எளிதாக இருக்கும் என அந்த ஐந்து நாடுகளின் பிரதிநிதிகள், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related posts

வெளிநாட்டு இராணுவங்கள் நாட்டுக்குள் நுழைவதற்கு முயற்சி .!

Fourudeen Ibransa
2 years ago

ஐ.தே.க.வின் ஒரேயொரு ஆசனம் ரணிலுக்கு; இறுதி முடிவு- தேர்தல் இடம்பெற்று 9 மாதங்களின் பின் தீர்மானம்

Fourudeen Ibransa
3 years ago

இலங்கையில் ஏற்ப்பட்டுள்ள மிகப்பாரிய கோவிட் அச்சுறுத்தல்!

Fourudeen Ibransa
3 years ago