தளம்
மலையகம்

உயிர் சேதம் ஏற்படும் அளவிற்கு இக்கட்டான சூழ்நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. .!

” மக்களால் ஜனநாயக முறையில் மேற்கொள்ளப்படும் போராட்டங்களின் போது பொலிஸார் வன்முறையை கையில் எடுத்துள்ளமையானது கண்டிக்கத்தக்கது.” – என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையினால் மக்கள் போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு அரசே பொறுப்பு கூற வேண்டியுள்ளது.

ரம்புக்கனையில் பொதுமக்களால் இன்று ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இவ்வார்ப்பாட்டத்தை நிறுத்துவதற்காக ரம்புக்கனையில் பொலிஸார் நடத்திய கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலை தொடர்ந்து பொலிஸாரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,11 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் பொறுப்பு கூற வேண்டிய அமைச்சு பதிலளித்தே ஆக வேண்டும் என்பதுடன்,

நாட்டில் ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெறுமானால் அதை இ.தொ.கா பார்த்துக்கொண்டிருக்காது.

நாட்டில் இன்று உயிர் சேதம் ஏற்படும் அளவிற்கு இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அரசு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.” – என்றார் ஜீவன்.

Related posts

ஜீவன் தொண்டமானை இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குமாறு அரசிடம் கோரிக்கை.1

Fourudeen Ibransa
3 years ago

சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்து அரங்கேறும் மோசடி!

Fourudeen Ibransa
2 years ago

பெருந்தோட்டக்காணிகளை அரசாங்கம் தனியாருக்கு வழங்குவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.!

Fourudeen Ibransa
3 years ago