தளம்
சிறப்புச் செய்திகள்

ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டை தொலைக்காட்சியில்தான பார்த்தேன்..!

தனது ஆட்சிக் காலத்தில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த அனுமதி வழங்க வில்லை  என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று (20) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறான ஒரு கருத்தை முன் வைத்தார் இந்த விடயம் தொர்ப்பில் அவர்மேலும் தெரிவிக்கையில்,

SAITM போராட்டத்தை தடுப்பதற்காக கூட தனது காலத்தில் துப்பாக்கி ஏந்த வேண்டாம் என பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை வழங்கியதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, ரம்புக்கனை சம்பவத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதாகவும் கூறினார்.

ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டை தொலைக்காட்சியில்தான பார்த்தேன். தொலைக்காட்சியில் பார்க்கும் போது சிலரை முதுகுக்குப் பின்னால் சுடுவதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.

இவ்வாறானதொரு பிரச்சினை ஏற்படும் போது கண்ணீர் புகை குண்டுகளை வீசுவது சகஜம் ஆனால் இவ்வாறான செயல் முறையற்றது என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் வரையில் தனக்கு புதிய அமைச்சு வழங்கப்பட்ட விடயம் தெரியாது.

Fourudeen Ibransa
3 years ago

07 ஆம் திகதி விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்!

Fourudeen Ibransa
2 years ago

ஜனாதிபதி பதவிலிருந்து இன்னும் நான் விலக வில்லை.!

Fourudeen Ibransa
2 years ago