தளம்
இலங்கை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது தீபாவளி வாழ்த்துச் செய்தி…!

வண்ணமயமான கலாசார நிகழ்வான தீபாவளி நன்னாளில் வாழ்த்து தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களுக்கு ஜனாதிபதி அனுப்பி வைத்துள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, அஞ்ஞானம் நீங்கி, மெய்ஞானம் பிறக்க வேண்டும் என்பதற்காக இந்துக்கள் இந்நன்னாளில் தங்களின் இல்லங்கள், கோயில்கள் என அனைத்து இடங்களிலும் தீபம் ஏற்றி, தீபத்திருநாளைக் கொண்டாடுகின்றனர்.

ஒளியால் மட்டுமே இருளை நீக்க முடியும். அதேபோல நம் தாய் நாட்டை முன்னொருபோதும் இல்லாத விதத்தில் சூழ்ந்திருக்கும் இருளை விரட்டி, ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து செயற்பட வேண்டும். சுபீட்சமான ஒரு நாட்டுக்கு சமாதானம், ஒற்றுமை, சகோதரத்துவம் என்பன மிகவும் முக்கியமானவை.

இனம், மதம், கட்சி, நிறம் என்ற பிரிவினையின்றி, நம் வாழ்விலும் நாட்டிலும் சூழ்ந்திருக்கும் இருளை நீக்க வேண்டும். இதனை குறிக்கோளாகக் கொண்டு நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். இதற்கு அனைவரும் கைகோர்த்துக்கொள்ள வேண்டும் என்று இத்தீபத் திருநாளில் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.

இம்முறை தீபாவளி பண்டிகையானது அனைவரது அபிலாசைகளையும் பூர்த்தி செய்து, இலங்கையை சௌபாக்கியம் நிறைந்த நாடாக உருவாக்கும் சிறந்த எதிர்காலத்தின் தொடக்கமாக அமைய வேண்டுமென பிரார்த்திக்கிறேன். தீபத்திருநாளை கொண்டாடும் உங்கள் அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Related posts

இலங்கையை எச்சரித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம்

Fourudeen Ibransa
3 years ago

ஒலிம்பிக் சீருடை குறித்து அறிக்கை கோரினார் நாமல்!

Fourudeen Ibransa
3 years ago

அமைச்சர் சி.பி.ரத்நாயக்கவுக்கும் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவுக்கும் இடையிலான முரண்பாடு.!

Fourudeen Ibransa
2 years ago