தளம்
இலங்கை

வெக்கமில்லையா? ஆடை அணிந்து தான் இருக்கிறீர்களா?

வெக்கமில்லையா? ஆடை அணிந்து தான் இருக்கிறீர்களா? – மைத்திரியை நோக்கி பேராயர்!

பல உயிர்களை காவு கொண்டமைக்கு பொறுப்புக் கூற வேண்டிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எப்படி தொடர்ந்தும் கட்சித் தலைவராக செயற்பட முடியும் என்றும் அத்துடன் அவரை நோக்கி, நீங்கள் வெக்கப்படவில்லையா? ஆடை அணிந்திருக்கிறீர்கள் என்றும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று (4) ஈஸ்டர் ஞாயிறு திருப்பலியின் பின்னர் இதனை தெரிவித்தார். மேலும்,

ஈஸ்டர் பயங்ரவாதம் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை விரைவில் செயற்படுத்துங்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த தற்கொலை தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை இன்று நினைவு கூறுகிறோம்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவை குற்றவாளியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளார்.

எனவே அவருக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு மேலும் தாமதிக்க வேண்டிய அவசியம் இல்லை. அத்துடன் இந்த தாக்குதலுடன் தொடர்புடைய அமைச்சர்கள் மற்றும் ஏனைய சிலர் தற்போது சுதந்திரமாக நடமாடுகின்றனர்.

இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். எனவே நடுநிலையாக அதனுடன் தொடர்புடைய அனைவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏப்ரல் 21ம் திகதிக்குள் நீதி கிடைக்காது விட்டால் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

Related posts

22 நிறைவேற்றப்பட்டது அரசாங்கத்துக்கு சவால்!

Fourudeen Ibransa
2 years ago

அரசியலமைப்புக்கு அப்பால் சென்று செயற்பட நான் தயாரில்லை .!

Fourudeen Ibransa
2 years ago

தேர்தலைப் பிற்போடத் தீர்மானிக்கவில்லை….!

Fourudeen Ibransa
1 year ago