தளம்
விளையாட்டு

வங்காளதேச பெண்கள் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த 2 வீராங்கனைகளுக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி.!

உலகின் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வைரஸ் வங்காளதேசத்திலும் நுழைந்துள்ளது. வங்காளதேச பெண்கள் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த 2 வீராங்கனைகளுக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு இருந்தது தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட இருவரும் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். இன்னும் 2 நாட்களில் அவர்கள் குணமடைந்துவிடுவார்கள் என்று டாக்டர்கள் கூறி உள்ளனர்.

பாதிக்கப்பட்ட வீராங்கனைகளுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவர்களில் யாருக்கும் பாதிப்பு இல்லை. அணியில் இடம்பெற்ற மற்ற வீராங்கனைகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். எனவே, கவலைப்படத் தேவையில்லை என சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்தார்.

Related posts

கிரிக்கெட் ஜோ ரூட் அடுத்தடுத்து சதம்.!

Fourudeen Ibransa
2 years ago

நியூசிலாந்தை வெள்ளையடிப்பு  செய்து இங்கிலாந்து அசத்தல் 

Fourudeen Ibransa
2 years ago

மரதன் ஓட்டத்தில் புதிய உலக சாதனை படைப்பு!

Fourudeen Ibransa
3 years ago