26 Oct 2022 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் எம்.பிக்கள் பலர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் சுமார் 40 பேர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐ.தே.கவில் இணைந்து கொள்வதற்கு பலர் தயாராக இருப்பதாகவும், ஆனால் எப்போது வருவார்கள் என கூற முடியாது எனவும் ரங்கே பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.
இணைந்திருங்கள்