நடிகர் விஷால் பிரபல நடிகையை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் ஹீரோவாக வலம்வரும் விஷால் செல்லமே படத்தின் மூலம் அறிமுகமாகி பல வெற்றிப்படங்களைக் கொடுத்துள்ளார். ஆனால் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் அவ்வளவாக வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் இவர் பொலிஸ் அதிகாரியாக நடித்திருக்கும் லத்தி படத்தினை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அதுமட்டுமில்லாமல் துப்பறிவாளன் 2 படத்தை விஷால் இயக்கி நடிக்கவுள்ளதாக இருந்த நிலையில், தற்போது சில காரணங்களால் படப்பிடிப்பிடிப்பு ஆரம்பமாகாமல் இருக்கின்றது.

பல சர்ச்சைகளில் சிக்கிவரும் விஷாலுக்கு திருமணம் எப்போது என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

தற்போது நடிகர் விஷால் 45 வயதாகும் நிலையில், நடிகர் சரத்குமாரின் மகளை காதலித்து இருவரும் பிரிந்து விட்டதாக தகவல் வெளியானது. பின்பு அனிஷா ரெட்டி என்ற பெண்ணை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர்.

இந்நிலையில் விஷாலின் தந்தை விரைவில் விஷாலுக்கு பிடித்த பெண்ணுடன் திருமண நடப்பதாக கூறியிருந்த நிலையில், நடிகர் விஷாலும் தான் காதலித்து திருமம் செய்வதாக கூறியிருந்தார்.

தற்போது விஷால் தன்னுடன் பூஜை படத்தில் நடித்த நடிகை அபிநயாவை காதலித்து வருவதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது.