கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை ஜப்பானிற்கு வழங்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இலங்கை வர்த்தக சம்மேளனத்தில் ஆரம்பமாகியுள்ள ஸ்ரீலங்கா பொருளாதார உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கிழக்கு கொள்கலன் முனையத்தை உண்மையாகவே அபிவிருத்தி செய்ய விரும்பினால் நாங்கள் அதனை வழங்கவேண்டும், ஜப்பானிற்கு அதனை முதலில் வழங்க முன்வந்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பான் ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதனை வேறு நாடுகளிற்கு வழங்குவோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இணைந்திருங்கள்