தங்கத் தாமரை மலரை தம்வசம் வைத்திருந்து விற்பனை செய்ய முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாத்தளை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாத்தளை அலுவிஹாய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளார்.
தொல்பொருள் மதிப்புடையதாகக் கூறப்படும் இந்த தங்கத் தாமரை மலரின் எடை 706 கிராம் என்பதுடன் இது பல்வேறு அளவுகளில் 24 இதழ்களைக் கொண்டுள்ளது.
யாழில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
கைதான சந்தேக நபர் இதனை 5,000,000 ரூபாவிற்கு விற்பனை செய்வதற்காக இதனை வைத்திருந்ததாக கூறப்படுகின்றது. மேலும் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் 33 வயதான மாத்தளை கவுடுபல்லல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் கூறப்படுகின்றது.
இணைந்திருங்கள்